Exclusive Nri News Around the World

கலைஞர் டிவியின் மானாட மயிலாட டான்ஸ் ஷோவின் 5வது சீசனின் இறுதிப் போட்டி அபுதாபியில்
கலைஞர் டிவியின் மானாட மயிலாட டான்ஸ் ஷோவின் 5வது சீசனின் இறுதிப் போட்டி அபுதாபியில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பிரபுதேவாவும், நயனதாராவும் கலந்து கொள்ளவுள்ளனர். அபுதாபி நேஷனல் தியேட்டரில் அக்டோபர் 15ம் தேதி மானாட மயிலாட சீசன் 5-ன் பிரமாண்ட இறுதிப் போட்டி நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதில் சீசன் 5ன் ஜட்ஜ்களான குஷ்பு, நமீதா, டான்ஸ் மாஸ்டர் பிருந்தா, நிகழ்ச்சி இயக்குநர் கலா மாஸ்டர், தொகுப்பாளர்கள் சஞ்சீவ், கீர்த்தி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். சிறப்பு விருந்தினர்களாக நயனதாராவும், பிரபுதேவாவும் பங்கேற்கின்றனர். இப்போட்டியில் ஜோடிகள் பயஸ்-வர்ஷா, பாலா-ஷ்வேதா, ரஹ்மான்-ஷிவானி, கிரண்-லீலாவதி, அஜார்-ஜெனிபர் ஆகியோரும், தமிழ், கோகுல் ஆகியோரும் பங்கு பெறுகின்றனர். இதற்கான டிக்கெட்களை அபுதாபி, துபாய் , ஷார்ஜாவில் பெற வகை செய்யப்பட்டுள்ளது. டிக்கெட்களைக் கீழ்க் கண்ட இடங்களில் பெறலாம் அபுதாபி சதர்ன்வுட் ரெஸ்டாரென்ட் - 02 6267673 ராயல் வெஜிடேரியன் ரெஸ்டாரென்ட் - 02 6787272 செட்டினாட் ரெஸ்டாரென்ட் - 02 6777699 அஞ்சப்பர் ரெஸ்டாரென்ட் - 02 6721500 சங்கீதா ரெஸ்டாரென்ட் - 02 6321618 ஸ்வாகத் ரெஸ்டாரென்ட் - 02 6778558 முசாபா செளத் இந்தியன் ரெஸ்டாரென்ட் - 02 5522795

- Kamal Basha

Back to Nri News Home

© Copyright 2010 All Rights Reserved vvonline.in