Exclusive Nri News Around the World

அபுதாபியில் பாரதி நட்புக்காக அமைப்பின் இப்தார் நிகழ்ச்சி


அபுதாபியில் தமிழ் அமைப்பின் இப்தார் நிகழ்ச்சி
அபுதாபியைச்சாரந்து செயல்பட்டுவரும் ‘ பாரதி நட்புக்காக” எனும் தமிழர்களுக்கான அமைப்பு 23-07-2013 ஆம் தேதி அபுதாபி இந்திய சமூக மற்றும் கலாச்சார மையத்தில் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்ச்சி அமைப்பின் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர கலீலுர்ரஹ்மான் முன்னிலை வகித்தார்.
இந்நிகழச்சியைமுருகப்பன் தொகுத்து வழங்கினார்.
தலைமையுரை நிகழ்த்திய ராமகிருஷ்ணன் , பாரதி நட்புக்காக அமைப்பு நடத்தும் பல்வேறு நிகழ்ச்சிகளில் இந்த இப்தார் நிகழ்ச்சிதான் மனநிறைவு அளிப்பதாக மக்களின் கரவோசைக்கிடையே கூறினார்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக தமிழகத்திலிருந்து மௌலவி அப்துல்லாஹ் பாகவி அவர்களும், பேராசிரியர் முனைவர் திருமலர் எம்.எம்.மீரான் பிள்ளை அவர்களும் கலந்து கொண்டனர்.
மோளலவி அப்துல்லாஹ் பாகவி தமது உரையில் மனிதநேயத்தின் அவசியம் குறித்தும் இஸ்லாமியக் கோட்பாட்டில் மனித நேயம் எவ்வாறு முக்கியத்துவம் பெறுகிறது என்றும் விளக்கமாகக் கூறினார்.
அதைத்தொடர்ந்து பேசிய திருமலர் மீரான் பிள்ளை தமிழ் இலக்கியத்தில் மத நல்லிணக்கமும் மனிதநேயமும் இடம் பெற்றிருக்கும் நிலையை விளக்கினார்.
நிகழ்வில் புரவலர் நோபல் மெரைன் ஷாகுல் ஹமீது, பாரதி நிறுவனர் திரு. ஜெகன், ஆலோசகர்கள் டாக்டர்.சிவராமன்,திரு.வீரமணி,செயற்குழு உறுப்பினர் திரு.முனீஸ்வரன் மற்றும் அய்மான் அமைப்பின் நிர்வாகிகள் எஸ்.ஏ.சி.ஹமீது, சையது ஜாபர் உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

- அபுதாபியிலிருந்து கமால் பாஷா

Back to Nri News Home

© Copyright 2013 All Rights Reserved vvonline.in