Exclusive Nri News Around the World

அபுதாபியில் உயிர் பாதுகாப்பு மற்றும் மின் தூக்கிகளின் பராமரிப்பின் அவசியம் பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது


ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் Lift எனப்படும் மின் தூக்கிகளில் உயிர் பாதுகாப்பு மற்றும் மின் தூக்கிகளின் பராமரிப்பின் அவசியம் பற்றிய கருத்தரங்கம் அபுதாபி லி-ராயல் மெரீடியன் ஹோட்டலில் 17-11-2014 இரவு நடைபெற்றது. ETA-Melco நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஜப்பான் நிறுவனமான Mitsubishi யின் ஜப்பான் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நிறுவன செயல் இயக்குநர் அஹமது மீரான், மிட்சுபிஸி ஜப்பான் நிறுவனத்தின் யஸூஹிகோ, ஓடோ உள்ளிட்ட மேலாண்மை நிலை இயக்குநர்கள் உரையாற்றினர். அவ்வுரையில் கருத்தரங்கின் அவசியம் பற்றியும், மின்தூக்கி பராமரிப்பில் பாதுகாக்கப்படும் பயனாளிகளின் உயிர் பாதுகாப்பு பற்றியும் விளக்கினர். இந்நிகழ்வில் மின்தூக்கிகளின் பராமாிப்பு பற்றிய கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. அபுதாபியில் உள்ள பல்வேறு தொழில் துறை வல்லுனர்கள் கலந்து கொண்டனர்.

- அபுதாபியிலிருந்து கமால் பாஷா

Back to Nri News Home

© Copyright 2014 All Rights Reserved vvonline.in