Exclusive Nri News Around the World

துபாயில் பெண்களே நடத்திய மகளிர் தின கொண்டாட்டம்


துபா-யில் வானலை வளர்-த-மிழ் அமைப்-பின் சார்-பில் மகளிர் தின சிறப்பு கொண்டாட்டம் நேற்று நடந்-தது. மகளிர் தின கொண்டாட்டத்தை முன்னிறுத்தி இந்த விழாவை மகளிரே முன்னின்று நடத்தினர். விழா-வுக்கு மீனாகுமாரி பத்மநாபன் தலைமைதாங்கினார். விழாவில் 'தாய்மை' குறித்த கவியரங்கமும் தமிழ்த்தேர் இதழும், கவி-ஞர் தமிழோவியனின் 'விடியலைநோக்கி' எனும் கவிதை நூலும் வெளியிடப்பட்டது. 'விடியலைநோக்கி' எனும் கவிதை நூல் முதல் பிரதியை மாலதி ரங்கராஜன் வெளியிட யமுனா லிங்கம் பெற்றுக் கொண்டார். மற்ற பிரதிகளை ஹெல்த் கணேசன்,ஆனந்த் பெற்றுக்கொண்டனர். தமிழ்த்தேரின் 'தாய்மை' இதழை மாலதி ரங்கராஜன் வெளியிட பிரியா கதிர்வேலன் பெற்றுக் கொண்டார். திருமதி வித்யா,உமர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை ரமா மலர்வண்ணன் வர-வேற்று பேசி-னார். சிறப்பு விருந்தினர்களாக, கல்வியாளர் மற்றும் பத்திரிக்கையாளர் மாலதி ரெங்கராஜன், இசைத்துறையைச் சேர்ந்த ராதிகா ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். தாய்மை குறித்து பொற்செல்வி கண்ணன் விரிவாக பேசினார். இதைத் தொடர்ந்து கவியரங்கம் நடைபெற்றது. கவியரங்கதை நர்கீஸ் ஜெயா, செல்வி ஆனிஷா ஆகியோர்தலைமை ஏற்று நடத்தினர். கவியரங்கில் கவிஞர்கள் யமுனாலிங்கம், கவியன்பன் கலாம், அதிரை மொய்சா, கவிதாயினி நாகினி, மீனாகுமாரி பத்மநாபன், ஸ்வேதா கோபால், உமா பாலாஜி, ரமா மலர் வண்ணன், பி.வி.கோவிந்தராசன், ஜியாவுதீன், ஆனந்த், பிரியா கதிர்வேலன், ஜெயராமன் ஆனந்தி, கிருஷ்.ராமதாஸ், முகவை காளிதாஸ், மற்றும் காவிரிமைந்தன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை ஸ்வேதா கோபால் தொகுத்துவழங்கினார்.

- அபுதாபியிலிருந்து கமால் பாஷா

Back to Nri News Home

© Copyright 2015 All Rights Reserved vvonline.in