Exclusive Nri News Around the World

துபாயில் நடைபெற்றது “ஹஜ் பெருநாள் விழா“

ஐக்கிய அமீரகம் துபாயில் “சுடா்வம்சம்“ அமைப்பின் சார்பில் “ஹஜ் பெருநாள் விழா“ நிகழ்ச்சி துபாய் கராமா சென்டரில் 19-11-2010 வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணிக்கு நடைபெற்றது. இவ்விழவின் துவக்கமாக மௌலவி மஃரூப் இறைவசனங்களை ஓதினார். இவ்விழாவிற்கு வந்திருந்தவா்களை “சுடா்வம்சம்“ அமைப்பின் தலைவா் ரகுராஜ் வரவேற்று அமைப்பின் செயல் திட்டங்களை விளக்கினார். அவா் தமது உரையில் “சுடா்வம்சம்“ அமைப்பின் சார்பாக தமிழகத்தைச் சோ்ந்த சுமார் 225 மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கியுள்ளதையும்,இதுபோல் ஒவ்வொருவருடமும் தொடா்ந்து வழங்கவிருப்பதையும் தெரிவித்தார். தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த கவுன்சிலா் கமலக்கண்ணன் தமது சமூக எண்ணங்களை துபாய் மக்களோடு பகிர்ந்து கொண்டார். கல்வி வளா்ச்சிக்கு “சுடா்வம்சத்தின்“ பங்களிப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். தமிழகத்திலிருந்து சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்ட பேராசிரியர் அப்துல்லா சிறப்புரை நிகழத்தினார். அமீரகத்தி்ல் வசித்துவரும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வளா்க்க வேண்டி முறை பற்றி அறிவியல ரீதியாகவும் மனோதத்துவ முறையிலும் சிறப்பாக விளக்கினார். ஹஜ் கடமையைப் பற்றியும் விளக்கினார். வருகை தந்திருந்த பார்வையாளா்களின் கேள்விகளுக்கும் விடையளித்தார். பேராசிரியா் அப்துல்லா அவா்களுக்கு நினைவுப்பரிசை ஹுசைன் காக்கா வழங்கினார். கவுன்சிலா் கமலக்கண்ணனுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. சுடா்வம்சத்தின்” நிகழச்சிப் பொறுப்பாளா் செல்வி நிவேதிதா நன்றியுடனும் மௌலவி மஃரூப் அவா்களின் துஆவுடனும் நிகழச்சி நிறைவுற்றது. வளைகுடா தமிழ் பேரவை தலைவா் எஃப்.அன்வா்,. ஹுசைன் காக்கா, வி.களத்தூா் சா்புதீன், யு.எ.இ.தமிழ்ச்சசங்க ரமேஷ் உள்பட அமீரகத்தின் பல்வேறு அமைப்பினரும் கலந்து கொண்டு சிறப்பித்தனா்.

- Kamal Basha



Back to Nri News Home


© Copyright 2010 All Rights Reserved vvonline.in