![]() |
|
![]() |
![]() |
மஸ்கட் : மஸ்கட் இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் ஈத் பெருநாள் ( தியாகத் திருநாள் ) இலக்கிய நிகழ்ச்சியாக ' தமிழ் இஸ்லாமிய இலக்கியத்தின் சிறப்பை வெளிக்கொணர்ந்து அறியும் முகமாக, 'ஞானப்பா தந்த பீரப்பா' என்ற தலைப்பில் ஆய்வுச்சொற்பொழிவு, நவம்பர் 19ஆம் தேதி, வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் மஸ்கட் பிரிவின் பொறுப்பாளர் கவிஞர். பஷீர் முகமது அவர்கள் தமிழக மற்றும் மஸ்கட் இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் செயல்பாடுகள் பற்றியும், சமீபத்தில் இரண்டு மாணவர்களுக்கு மஸ்கட் பிரிவு செய்த கல்வி உதவித்தொகை பற்றியும், இனி வரும் இலக்கிய நிகழ்வுகள், தமிழ் இஸ்லாமிய இலக்கியத்தில் தமிழகத்தின் இஸ்லாமிய வரலாறு பற்றிய பல நல்ல ஆய்வுக் கோவைகள், பட்டறைகள் மற்றும் கல்விபணி பற்றியும் எடுத்துக் கூறினார்.தொடந்து கவிஞர். அபுல் ஹசன் அவர்கள் “பீரப்பா தந்த ஞானப்பா” என்ற தலைப்பில் “தக்கலை பீர்முகம்மது (ரலி)” அவர்கள் பற்றியும், அவர்கள் படைப்பில் காணப்படும் தமிழ் இலக்கிய, ஆன்மீக, சமூக செறிவினை அழகாகவும், தனக்கே உரித்தான கவிதை கலந்த நடையில் ஆய்வுச்சொற்பொழிவாற்றினார். பீரப்பா பற்றியும், ஞானப்பாக்கள் பற்றியும் சொன்ன அவரின் கருத்துக்கள் அனைவருக்கும் புதிய தகவல்களை அறியும் முகமாக அமைந்தது.தொடர்ந்து ஹஜ் பெருநாள் பற்றிய கவிதையை கவிஞர். பஷீர் முகமது அவர்கள் வழங்கினார். மஸ்கட் புகழ் பாடகர் ஜனாப். அன்வர் அலி அவர்கள் இஸ்லாமிய இன்னிசை வழங்கினார். இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் மஸ்கட் பிரிவின் செயலாளர். ஜனாப். காமில் தாஹிர் கனி அவர்கள் நன்றியுரை வழங்க ஈத் சங்கமம் இனிதே நிறைவுற்றது. விழாவில் இஸ்லாமிய இலக்கிய கழகப் பொருளாளர் ஜனாப்.அப்துல்சலாம் மற்றும் உறுப்பினர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
- Kamal Basha
|