Exclusive Nri News Around the World

ஐக்கிய அரபு அமீரகத்தின் 39வது தேசிய தினக்கொண்டாட்டம்

அரபு-இந்திய கலாச்சார விழா வளைகுடாவின் வரைபடத்தில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கென்று தனி இடமுண்டு. தமிழர்களின் வாழ்;க்கை முன்னேற்றத்திலும் இந்நாட்டின் பங்கு அதிகம். டிசம்பர் 2 ஆம் தேதி யு.எ.இ. யின் தேசியநாளாகும். ஐக்கிய அரபுஅமீரகத்தின் 39 வது தேசியநாள் கொண்டாட்டம் துபாயில் மிகச் சிறப்பாக இரண்டு நாள் கொண்டாடப்பட்டது. துபை ஈமான்ää அல்-அஹ்லி கிளப் மற்றும் யு.எ.இ.தமிழ்ச் சங்கம் ஆகியவைகள் சிறப்பாகக் கொண்டாடின. அல்-அஹ்லி கிளப்பும் யு.எ.இ தமிழ்ச்சங்கமும் இணைந்து அரப-இந்தோ கல்சுரல் நிகழ்ச்சி நடத்தின. துபாய் கிஸஸ் அல்-அஹ்லி கிளப்பில் யு.எ.இ. தேசிய நாள் கொண்டாட்டம் யு.எ.இ.தமிழ்ச்சங்கத்துடன் இணைந்து கொண்டாடியது. இக்கொண்டாட்டம் அரப்-இந்தோ கல்சுரல் நிகழச்சியாகக் கொண்டாடப்பட்டது. அரேபிய கலைநிகழச்சியும் இந்திய கலைநிகழ்ச்சியும் ஒருங்கே இணைந்து நடைபெற்றது. தமிழ் கலை நிகழ்ச்சி அரபு நிகழ்ச்சியுடன் இணைந்து நடத்தியது இதுவே அமீரகத்தில் முதல் நிகழ்ச்சியாகவிருக்கும். ஓமன் கலைக்குழுவும் தமிழ் கலைக்குழுவும் இணைந்து நடத்தின. மாணவ-மாணவிகளுக்கான நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிபற்றி யு.எ.இ.தமிழ்ச்சங்க தலைவர் ரமேஷ் கூறும்போது ‘இக்கலைநிகழச்சி இரண்டு கலைநிகழ்ச்சிகளும் ஒருங்கே ஒரேமேடையில் நடைபெற்றது தமிழர்களின் கலைநிகழச்சிக்கான ஒரு அங்கீகாரம்’ எனத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு அரபு மற்றும் தமிழ் மக்களும் கலந்து கொண்டனர். இதன் முதல்நாள் அமீரகத்தின் 39 வது தேசிய நாளும்ää துபாய் ஈமான் அமைப்பின் 35வது ஆண்டுவிழாவும் துபாய் தேசிய பூங்காவில் டிசம்பர் 2 ஆம் தேதி நடைபெற்றது. வளைகுடாவின் வரைபடத்தில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கென்று தனி இடமுண்டு. தமிழர்களின் வாழ்;க்கை முன்னேற்றத்திலும் இந்நாட்டின் பங்கு அதிகம். இவ்வமீரகத்தின் 39வது தேசிய நாளும் ஈமான் அமைப்பின் 35வது ஆண்டுவிழாவும் கொண்டாடப்பட்டது. துபாய் இந்தியன் முஸ்லிம் அசோசியேஷன் ( ஈமான் ) அமைப்பின் தலைவர் சையத் எம்.ஸலாஹ_த்தீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழச்சிää பல்வேறு தமிழர்களின் விளையாட்டு நிகழச்சியோடு ஆரம்பித்தது. உரியடித்தல்ää கயிறுஇழுத்தல் போட்டிää கண்கட்டு நடை என பல்வேறு நிகழச்சிகளில் காயல்பட்டிணம் ää மதுக்கூர்ää முதுகுளத்தூர்ää வி.களத்தூர்ää உள்;ளிட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த யு.ஏ.இ. வாழ் தமிழர்கள் கலந்து கொண்டனர். துபாய் நகரின் தமிழர்அமைப்பாக கடந்த 35 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது ஈமான் என்ற இந்திய முஸ்லிம் அசோசியேஷன். அமீரகத்தின் முதல் தமிழ் அமைப்பு என்பது தமிழர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகும். தமிழகத்தில் ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவளித்துவருகிறது என்பது இதன் சிறப்பு இந்நிகழச்சிக்கு சிறப்பு விருந்தினராக வேலூர் பாரளுமன்ற எம்.பி. அப்துல்ரஹ்மான் கலந்து கொண்டார்.

- Kamal Basha


Back to Nri News Home


© Copyright 2010 All Rights Reserved vvonline.in