Exclusive Nri News Around the World

UAE TAMIL SANGAM KALAI ARANGAM 2010

நவம்பர் 26, 2010 – வெள்ளிக் கிழமை
அமீரக வரலாற்றில் முதன் முறையாக தமிழ்ச் சங்கம் சூரிய கதிர் ஏற்பாடு செய்திருந்த வெளியரங்க கலை நிகழ்ச்சி. 26-11-2010 வெள்ளி மாலை 7.30க்கு துவங்கிய நிகழ்ச்சி நள்ளிரவு 12.30 வரை இடைவிடாத கேளிக்கையும், பொழுதுபோக்கும், உற்சாகமுமாய் நகர்ந்தது. நடனங்கள், இன்னிசைக் கச்சேரி, பலகுரல் நிகழ்ச்சிகள், கரகம் மற்றும் மேஜிக் ஷோ என பன்முகம் காட்டி பரவசப் படுத்தியது. திருமதி சாந்தா கிருஷ்ணமூர்த்தி, திருமதி. ஷெரின், திருமதி. மீனா வெங்கட், திருமதி. நூரூதின், மற்றும் திருமதி. இந்திரா மோகன் தாஸ் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்வை தொடக்கினார்கள். திருமதி. கீதா சுவாமி நாதனின் தொடக்கவுரையைத் தொடர்ந்து திருமதி. சித்ரா பிராஸ்பர் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்திய சின்னத்திரை கலைஞர்களும், நடனக் குழுவினரின் நடனங்களுக்கு இடையில், UAE தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர்களின் 54 குழந்தைகளின் நடனங்கள் அரங்கேறின. இந்த நடனங்களை திருமதி. ஸ்ரீ கங்கா ரமேஷ். அமைத்திருந்தார் . திரையிசையின் மலரும் நினைவுகளாக, நம் நேற்றைய திரை இசைப்பாடல்களுக்கு திருமதி.கங்கா திருமதி.சித்ராவின் உதவியுடன் அமைத்திருந்த நடனங்கள் நேர்த்தியாய் பார்வைக்கு விருந்தாயின. நேற்றைய நாயகர்களின் ஆடை மற்றும் அணிகளையும் நினைவு கூர்ந்து பார்ப்பவருக்கு பரவசம் சேர்த்தன. 16 ஜோடி நடனங்கள் என நிமிடத்திற்கு நிமிடம் சுழன்று சுழன்று வந்து பார்ப்பவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். இவர்கள் அனைவருமே UTS தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் என்பது பெருமையுடன் நினைவு கூற வேண்டிய அதிசயத் தகவல். தமிழகத்தில் இருந்து அமீரகம் வந்த கலைச்செல்வன் டிங்கு மற்றும் குழுவினர், சங்க உறுப்பினர்களின் திறமைகளை பார்த்து அதிசயித்து வாழ்த்துக்களும் தெரிவித்தனர். ஒரு சகஜ உரையாடலின் போது கலைச்செல்வன் டிங்கு குறிப்பிடுகையில் இம்மாதிரி நிகழ்ச்சிகளில் வெளியாட்களின் கலை நிகழ்ச்சிகளை நாங்கள் அனுமதிப்பதில்லை, ஆயினும் தங்கள் திறமையும் ஆர்வமும், குறிப்பாக கங்கா ஷுவராக்கின் நடன திறமைகளும், கொடுத்த நம்பிக்கையே எங்களை அனுமதிக்க செய்தது என்றார். நிகழ்வில் அணி சேர்க்க, ஒரு அதிரடி விளையாட்டும் இருந்தது. தம்பதியினருக்கும், இளைஞர்களுக்குமென இரு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசாக டிவிடி ப்ளேயர் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி குறித்து சூரிய கதிரின் நிறுவனர் சொல்லும் போது. “இரண்டு மூன்று மாதங்களாக தமிழகத்தில் நிகழ்ச்சி நடத்தி வருகிறோம். முதன் முறையாக அன்னிய தேசத்தில் தமிழ்ச் சங்கத்தின் ஆதரவுடன் நடத்துகிறோம். இப்படி ஒரு மாபெரும் வெற்றி எங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி “ என்றார். தமிழ் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களின் விருந்தோம்பலும் உபசரிப்பும் மிகவும் மேன்மையாக இருந்தது. இந்நிகழ்ச்சி குறித்து தமிழ்ச் சங்கத்தின் தலைவர் ரமேஷ் விஸ்வநாதன் கூறுகையில் இம்மாபெறும் வெற்றியை சூரிய கதிர்/ நூர் அல் தீன் / திரு. பாண்டு / திரு.டிங்கு மற்றும் குழுவினருக்கு அர்ப்பணிக்கிறேன். தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர்கள் திருமதி ஸ்ரீகங்கா, திருமதி.சித்ரா பிராஸ்பர், திரு.பிராஸ்பர் மற்றும் திருமதி.கீதா சுவாமி நாதன், திரு.சுவாமி நாதன், திருமதி.விஜய குமாரி, திரு.ரவி, திருமதி.விஜி பாலு, திரு,பாலு, திருமதி.காமாட்சி ஸ்ரீராம், திரு,ஸ்ரீராம், திருமதி.சௌக்கியா அர்விந்த், திரு.அர்விந்த், திருமதி.கோகிலா அருண், திரு.அருண் குமார், திருமதி.ரமா, திரு ராதாகிருஷ்ணன், திருமதி.ஜமுனா, திரு.ஷோபன் பாபு, திருமதி.பிரியா விஜய், திருமதி இந்து செய்தேவ், திருமிகு.கதீஜா பேகம், திருமதி.மகேஸ்வரி தமிழ்ச் செல்வன், திரு.பாலாஜி ராம், திரு.பத்மராஜ் பிரேமானந்தா, திரு.செந்தில் வேலன், திரு.இம்ரான், திரு.கார்த்திகேயன், மற்றும் திரு.மணி (கொலம்போ டயர்ஸ்) திரு.கிரிஸ் (சாலிட் ராக்) அவர்களுக்கும். துபாய் மற்றும் சார்ஜாவின் முனிசிபாலிட்டிக்கு எங்கள் பிரத்யேக நன்றி. ETA அஸ்கான் மற்றும் கிளின்கோ நிறுவனங்களுக்கு நன்றி.“ என்றார்.

- Kamal Basha


Back to Nri News Home

© Copyright 2010 All Rights Reserved vvonline.in