Exclusive Nri News Around the World

துபாயில் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ மாண‌வ‌ர்க‌ளுட‌ன் அதிகாரிக‌ள் க‌ல‌ந்துரையாட‌ல்

துபாய் : துபாய் இந்திய‌ க‌ன்சுலேட் கூட்ட‌ அர‌ங்கில் சென்னைப் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ தொலைநிலைக்க‌ல்வி மாண‌வ‌ர்க‌ளுட‌ன் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ அதிகாரிக‌ள் 16.12.2010 வியாழ‌க்கிழ‌மை மாலை க‌ல‌ந்துரையாடின‌ர். துபாயில் சென்னைப் ப‌ல்கலைக்க‌ழ‌க‌ அங்கீகார‌த்துட‌ன் செய‌ல்ப‌ட்டு வ‌ந்த‌ கேம்ப‌ஸ் இன்ஸ்டிடியூட் மாண‌வ‌ர்க‌ளிட‌ம் க‌ல்விக் க‌ட்ட‌ண‌த்தை வ‌சூல் செய்து ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்தில் க‌ட்ட‌ண‌த்தை முறையாக‌ செலுத்த‌வில்லை. மேலும் சேர்க்க‌ப்ப‌ட்ட‌ மாண‌வ‌ர்க‌ள‌து த‌க‌வ‌லையும் ப‌ல்க‌லைக‌ழ‌க‌த்துக்கு தெரிவிக்க‌வில்லை. இத‌னைய‌டுத்து மாண‌வ‌ர்க‌ள் வேலூர் நாடாளும‌ன்ற‌ உறுப்பின‌ர் எம். அப்துல் ர‌ஹ்மான், இந்திய‌ க‌ன்ச‌ல் ஜென‌ர‌ல், துணைவேந்த‌ர் உள்ளிட்ட‌ ப‌ல‌ரிட‌ம் புகார் அளித்த‌ன‌ர். இத‌ன் தொட‌ர்ச்சியாக‌ ப‌ல‌க‌லைக்க‌ழ‌க‌ அதிகாரிக‌ள் பேராசிரிய‌ர் எஸ். க‌ருணாநிதி, பேராசிரிய‌ர் ஆர். ராஜ‌குமார், பேராசிரிய‌ர் வி. த‌ங்க‌ராஜ் உள்ளிட்டோர் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ மாண‌வ‌ர்க‌ளைச் ச‌ந்தித்து குறைக‌ளைக் கேட்டறிந்து அவ‌ற்றை நிவ‌ர்த்தி செய்து ப‌டித்த‌ ப‌டிப்புக‌ளின் சான்றித‌ழ்க‌ள் விரைவில் கிடைக்க‌ ஆவ‌ண‌ செய்வ‌தாக‌த் தெரிவித்த‌ன‌ர். கேம்ப‌ஸ் இன்ஸ்டிடியூட்டின் அங்கீகார‌த்தையும் ர‌த்து செய்வ‌தாக‌ தெரிவித்த‌ன‌ர். தொலைநிலைக்க‌ல்வியின் இய‌க்குந‌ராக‌ செய‌ல்ப‌ட்டு வ‌ந்த‌ அதிகாரி இதுபோன்ற‌ பிர‌ச்ச‌னைக‌ளை திற‌ம்ப‌ட‌ கையாள‌ இய‌லாத‌ கார‌ண‌த்தினால் க‌ட்டாய‌ விடுப்பில் அனுப்ப‌ப்ப‌ட்ட‌தாக‌வும் தெரிவித்த‌ன‌ர். இக்கூட்ட‌த்தில் இந்திய‌ க‌ன்சுலேட்டின் அதிகாரி ஜெய்தீப், ஜ‌ஹாங்கீர், ச‌லீம், ஹ‌பிப் முஹ‌ம்ம‌து திவான், முஹ‌ம்ம‌து ஜாப‌ர் க‌னி, க‌னி, ஜெஸிலா, பீட்ட‌ர் உள்ளிட்ட‌ மாண‌வ‌ர்க‌ள் சுமார் 75 பேர் ப‌ங்கேற்ற‌ன‌ர்.

- Kamal Basha



Back to Nri News Home

© Copyright 2010 All Rights Reserved vvonline.in