Exclusive Nri News Around the World

அமீரகத் தமிழ் மன்றத்தின் புதிய நிர்வாகிகள்

அமீரகத் தமிழ் மன்றம் கணினியில் தமிழின் செயல்பாட்டை பரவலாக்கும் நோக்கத்தோடு கடந்த பதினொரு ஆண்டுகளாக துபாயில் இயங்கி வருகிறது. `தேமதுரத் தமிழோசை உலகெலாம் பரவ வகை செய்வோம்` என்ற கொள்கையோடு நல்ல தமிழில் பேசவும் எழுதவும் உற்சாகப்படுத்தும் இந்த அமைப்பு ஆண்டு தோறும் நல்ல படைப்புகளைத் தாங்கி வரும் ஆண்டு விழா மலரையும் வெளியிட்டு வருகிறது. இதைப்போன்றே `தொலைக்காட்சியில் தொலைந்த கண்களைப் புத்தகங்கள் மூலம் மீட்டெடுப்போம்` என்ற முழக்கத்தோடு தொழிலாளர் முகாம்களில் தொழிலாளர்களுக்காக நூலகம் ஒன்றையும் நடத்தி வருகிறது. திறந்த அமைப்பாக ஜனநாயகத்தன்மையுடன் இயங்கும் இவ்வமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு சமீபத்தில் நடைபெற்றது. உறுப்பினர்கள் பெருவாரியாகக் கலந்து கொண்ட விழாவில் இவ்வாண்டுக்கான நிர்வாகிகளின் பட்டியலை தற்போதைய தலைவர் ஆசிப் மீரான் அறிவித்தார். இதன்படி, அமீரகத் தமிழ் மன்றத்தின் தலைவராக திரு. காமராஜனும் உதவித் தலைவராக திரு. சிவகுமாரும், பொதுச் செயலாளராக திருமதி ஜெஸிலா ரியாசும், கலைச் செயலாளராக திரு. பாரூக் அலியாரும், இணைச் செயலாளராக இரமணியும், பொருளாளராக நஜ்முதீன் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒருங்கிணைப்பாளர்களாக திருமதி. பானு காமராஜன், திருமதி. சுமதி சுப்ரமணியன், திரு. வி. கார்த்திகேயன், திரு. கார்த்திகேயன் பொன்னம்பலம் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். திரு. ஆசிப் மீரான், திரு. ஜெகுபர், திரு. அகமது முகைதீன் ஆ,கியோர் அமைப்பின் அலோசகர்களாக பலம் சேர்ப்பார்கள். இவ்வாறு பொதுச்செயலாளா் ஜெஸிலா ரியாஸ் தெரிவித்துள்ளார்

- Kamal Basha


Back to Nri News Home


© Copyright 2010 All Rights Reserved vvonline.in