Exclusive Nri News Around the World

துபாயில் தமிழக வணிகப் பிரமுகர்களுக்கு வரவேற்பு


துபாய் : துபாயில் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை நடைபெறும் இரண்டாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டில் பங்கேற்க தமிழகத்திலிருந்து வருகை புரிந்த வணிகப் பிரமுகர்களுக்கு 30.09.2011 வெள்ளிக்கிழமை நண்பகல் துபாய் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரமுகர்களை வரவேற்புக் குழுவினர் மாநாட்டு கன்வீனர் முனைவர் சம்பத் தலைமையில் பூச்செண்டு அளித்து சிறப்புற வரவேற்றனர். இவ்வரவேற்பில் பல்வேறு அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாநாடு சிறப்புற நடைபெற துபாயில் தமிழக நிறுவனமான ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழுமம் முக்கியப் பங்காற்றி வருவது குறிப்பிடத்தக்கது. அமீரகத் தமிழர்களின் வரவேற்பினை ஏற்றுக் கொண்ட வணிகப் பிரமுகர்கள் தங்களது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.

- Kamal Basha

Back to Nri News Home

© Copyright 2011 All Rights Reserved vvonline.in