Exclusive Nri News Around the World

துபாயில் ந‌க‌ர‌த்தார் ச‌ங்க‌ம் ந‌ட‌த்திய‌ ர‌த்த‌தான‌ முகாம்


துபாய் : துபாயில் ஐக்கிய அரபு நாடுகள் நக‌ர‌த்தார் கூட்டமைப்பு (INK) ம‌ற்றும் அல் வாஸ‌ல் ம‌ருத்துவ‌ம‌னை ஆகிய‌வை இணைந்து 136-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக, இரத்த தான முகாம் 04.11.2011-வெள்ளிக்கிழமை காலையில் துபாய் உள்ள அல்-வாஸல் மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் 22 ஆண்களும் மற்றும் 3 பெண்களும் கலந்துக் கொண்டு தங்களது குருதி கொடைதனை வழங்கின‌ர். வரும் ஆண்டுகளில் இது போல் அதிக அளவு நண்பர்கள் கலந்துக் கொண்டு இரத்த தானம் வழங்கவும் வேண்டுகோள் வைக்கப்பட்டது. 'நாடு எதுவாயினும் உயிர் ஒன்று தான் என்பதைக் கொண்டு உயிர் காக்க இரத்த தானம் செய்வீர்' என்ற‌ வேண்டுகோளுட‌ன் இந்த‌ ர‌த்த‌தான‌ முகாம் சிற‌ப்புந‌ ந‌டைபெற்ற‌து. நிக‌ழ்விற்கான‌ ஏற்பாடுக‌ளை ந‌க‌ர‌த்தார் கூட்ட‌மைப்பின் நிர்வாகிக‌ள் அழ‌க‌ப்ப‌ன், ம‌ணிக‌ண்ட‌ன் உள்ளிட்ட‌ குழுவின‌ர் சிற‌ப்புற‌ செய்திருந்த‌ன‌ர்.

- Kamal Basha

Back to Nri News Home

© Copyright 2011 All Rights Reserved vvonline.in