Exclusive Nri News Around the World

துபாயில் பெருநாள் சந்திப்பு மற்றும் கல்வி விழிப்புணர்வு கூட்டம்


துபாய் : துபாயில் நவம்பர் - 06 - 2011 மாலை 7.00 மணிய‌ள‌வில் ஸ்டார் ச‌ர்வ‌தேச‌ப் ப‌ள்ளி அரங்கத்தில் தியாக‌த் திருநாள் ச‌ந்திப்பு ம‌ற்றும் க‌ல்வி விழிப்புண‌ர்வு கூட்ட‌ம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தாலுகா நடுக்கடை, முஹ‌ம்மதுபந்தர், கண்டியூர், திருப்பூந்துருத்தி ஜமாஅத்தார்கள் ஒருங்கிணைந்து நடத்தினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை A.S. இப்ராகிம் தலைமை தாங்கினார். ஷார்ஜா பிளாக்துளிப் நிறுவ‌ன‌ நிர்வாக‌ இய‌க்குந‌ர் யஹ்யா முன்னிலை வகித்தார். மேலத்திருப்பூந்துருத்தி துக்காச்சி காஜாமைதீன் துவக்க‌வுரை நிக‌ழ்த்தினார். முகம்மது பந்தர் ஹாபிஸ் முகம்மது முஸ்தபா இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார். மேலத்திருப்பூந்துருத்தி லியாகத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார். அதை தொடர்ந்து ஸ்கைசீ இய‌க்குந‌ர் செய்ய‌து அப்துல் காதர் காக்கா ( சீனா தானா ),சென்னை தானிஷ் அஹ‌மது பொறியிய‌ல் கல்லூரி செய‌லாள‌ர் காதர்ஷா, ஈமான் ம‌க்க‌ள் தொட‌ர்பு செய‌லால‌ர் திருப்பனந்தாள் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா, ஊட‌க‌த்துறை செய‌லாள‌ர் முதுவை ஹிதாயத் ஆகியோர் கல்வியின் விழிப்புணர்வை பற்றி விரிவாக பேசினார்கள். அதை தொடர்ந்து நடுக்கடை A.P. முகம்மது (தம்பி ராஜா, ஹ‌ஸ‌ன் அலி, இக்பால் ம‌ற்றும் அப்துல் க‌பூர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மேலத்திருப்பூந்துருத்தி அஹ‌மது நன்றியுரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அனைவர் மனதிலும் பெரும் ஆறுதலாக இருந்த விசயம் என்னவெனில் மார்க்க கல்வியுடன் கூடிய ஒரு பொதுக்கல்வி நிறுவனம் த‌ங்க‌ள‌து பகுதிக்கு அதி விரைவில் அமைய உள்ள செய்தி அறிந்து அனைவரும் சந்தோஷ‌மாக விடை பெற்றுச் சென்றனர்.

- Kamal Basha

Back to Nri News Home

© Copyright 2011 All Rights Reserved vvonline.in