Exclusive Nri News Around the World

அபுதாபி தமிழ் பெண்கள் வட்ட 10 ஆண்டுக் கொண்டாட்டம்


அபுதாபி தமிழ் பெண்கள் வட்டம் கடந்த 10 வருடங்களாக ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதன் பத்தாம் ஆண்டு விழா அபுதாபி இந்திய சமூக மற்றும் கலாச்சார கூடத்தில் ( Indian Social & Cultural Centre ) 18.11.2011 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளதாக அதன் தலைவ என அதன் தலைவி மீனா வெங்கடேஷ் தெரிவித்தார். இவ்விழாவில் தலைமை விருந்தினராக இந்திய தூதரக அதிகாரி M.K.லோகேஷ் கலந்து கொள்கிறார். தொழிலதிபா் சுதிர் குமார் செட்டி, இந்திய சமூக மற்றும் கலாச்சாரக் குழுவின் தலைவா் ரமேஷ் வி. பணிக்கா் ஆகியோர் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொள்கின்றனா். சிறப்புப் பேச்சாளராக தமிழகத்திலிருந்து கலைமாமணி சுகி சிவம் அவா்கள் உரையாற்றவிருக்கிறார். இந்நிகழ்ச்சியில் அசத்தப் போவது யாரு புகழ் ஈரோடு மகேஷ், “வடிவேல்” பாலாஜி, ஆகியோரின் காமெடி நிகழ்ச்சியும், கிராமியப் பாடகா் வேல் முருகனின் கிராமியப் பாடல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது மேலும் கலை மற்றும்கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. இந்நிகழ்வில் அபுதாபி பெண்கள் வட்டத்தின் பத்து ஆண்டு நிகழ்வுகளின் வீடியோ தொகுப்பு ( CD ) வெளியிடப்படவிருக்கிறது.

- Kamal Basha

Back to Nri News Home

© Copyright 2011 All Rights Reserved vvonline.in