![]() |
|
அபுதாபி: அபுதாபிமகளிர் வட்டத்தின் 10 ஆம் ஆண்டுவிழாக் கொண்டாட்டம் 18.11.11 அன்று மாலை 6 மணிக்கு அபுதாபிஇந்தியன் சோஷியல் மற்றும் கல்சுரல் சென்டரில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.சிறப்பு விருந்தினராக தமிழக பேச்சாளர் சுகி.சிவம், நகைச்சுவை கலைஞா்கள் ஈரோடுமகேஷ், வடிவேல் பாலாஜி, கிராமப் பாடகா் வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். கமிட்டி உறுப்பினர்கள் குத்துவிளக்கேற்ற தமிழ் தாய் வாழ்த்துடன் விழா துவங்கியது. விழாவிற்கு தலைமை விருந்தினராக இந்திய கன்சல் திரு. ராஜகோபால் கலந்து கொண்டுபேசும்போது, “அபுதாபி மகளிர் வட்ட சேவைகள் பாராட்டுக்குரியது. குழந்தைகளுக்குதமிழை வீட்டிலிருந்தே கற்றுக் கொடுக்க வேண்டும். தமிழா்களின் பண்டைய வரலாறுகளைநாம் அறிந்து கொள்ள முற்படுவதே இல்லை. “ஏழாம் அறிவு” போன்ற படங்கள் மூலமாகத்தான்தமிழர்களின் பண்டைய வரலாறுகள் தெரியவருகிறது. இந்த நிலை மாறவேண்டும். நம்மூதாதையர்களின் வரலாறுகளை நாம் படிக்க முற்படவேண்டும்“ என்றார். அமைப்பின்செயல்பாடுகள் குறித்து அதன் தற்போதைய தலைவி மீனா வெங்கடேஷ் விளக்கினார். 10 வருடங்களாகஅபுதாபி மகளிர் வட்டம் மேற்கொண்ட பெருமுயற்சிகளை பட்டியலிட்டார். சிறப்புப்பேச்சாளர் சுகி.சிவம் அமீரக வாழ் தமிழ் மக்கள் செய்ய வேண்டிய செயல்பாடுகளை விளக்கினார்..“வெளிநாடு வந்துவிட்டால் இதுதான் நமக்கான வாழ்க்கை என்று வாழப் பழகிக் கொள்ளவேண்டும்.மாறாக, ஊரிலிரு்ந்தால் நன்றாகவிருக்குமே என்று சிலர் யோசிப்பார்கள், இங்கிருந்து ஊர்சென்ற சிலர் அபுதாபியிலேயே இருந்திருக்கலாமேஎன்றும் நினைக்கலாம். நிகழ்காலத்தில் வாழப் பழகிக்கொள்ள வேண்டும்“ என்றார். நிகழ்ச்சியின்இடை இடையே ஈரோடு மகேஷ்., வடிவேல் பாலாஜி, கிராமியப் பாடகர் வேல்முருகன் ஆகியோர்களின்நிகழ்ச்சிகள் சபையை கலகலப்பாக்கியது. இந்நிகழ்ச்சியின்முத்தாய்ப்பானதாகவும். அபுதாபி மகளிர் வட்டத்தின் தொலைநோக்கு சிந்தனையும் காணமுடிந்தது. இலங்கை மற்றும் பிரெஞ்ச் நாடுகளின் கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது. அபுதாபிமகளிர் வட்டத்தின் 10 ஆண்டுகளின் நிகழ்ச்சிகளின் தொகுப்பாக டி.வி.டியை அபுதாபி இந்தியகாண்சல் திரு ராஜகோபால் வெளியிட அவற்றை ஈடிஏ நடராஜ் மற்றும் தமிழ் மன்ற நிர்வாகிகள் அஷ்ரப், ஆசிப்மீரான்,ரமேஸ், ஜியாவுத்தீன் உள்பட பலர் பெற்றுக் கொண்டனர்.
- Kamal Basha
|