Exclusive Nri News Around the World

ஜனவரி 20 ல் துபாயில் இலவச கணினி பயிலரங்கம் ! – அமீரக்தமிழ் மன்றம் ஏற்பாடு..

தமிழை , தமிழோடிணைந்த தொழில் நுட்பங்களை, அது பற்றிய விழிப்புணர்வை ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏற்படுத்துவதற்காக, தமிழ் இணையத்தினால் ஒன்றுபட்ட தமிழ் நெஞ்சங்கள் கூடி உருவாக்கியதுதான் ஐக்கிய அரபு “அமீரகத் தமிழ் இணைய நண்பர்கள் ” அமைப்பு.. இதன் நோக்கத்தில் எள்ளளவும் மாறாமல் சிறப்பாக செயல்பட்டுவரும் இவ்வமைப்பு, பல்வேறு காலகட்டங்களில் அதற்கான பநடைமுறைப்படுத்தி தன் சேவையை நிரூபித்து வருகிறது. அந்தவகையில் வருகிற 20-01-2012 வெள்ளிக்கிமை மாலை 5.30 மணிமுதல் 7.30 மணிவரை “கணினி பயிலரங்கை“ துபாயில் நடத்த தீர்மானித்துள்ளது. இது முற்றிலும் இலவசம் . சினிமா நிகழ்ச்சி, கூத்துக் கும்மாளம் அனைத்தையும் அந்த வாரம் மட்டும் ஒதுக்கிவைத்துவிட்டு, உங்கள் முன்னேற்றத்திற்காக அந்த நேரத்தை செலவிடுங்கள். வாழ்த்துக்கள்

- கமால் பாஷா

Back to Nri News Home

© Copyright 2012 All Rights Reserved vvonline.in