Exclusive Nri News Around the World

துபாயில் தமிழ்த்துளி பொங்கல் விழா

தமிழ்த்துளி எனும் குழந்தைகள் அமைப்பு ஷார்ஜாவில் சிறப்பாக செயல்பட்டுவருகிறது. வளைகுடாவில் வசிக்கும் தமிழ்க குழந்தைகள் தமிழ்கற்க இவ்வமைப்பு பாடுபட்டுவருகிறது. அவ்வப்போது, பேச்சுப்பயிற்சி உள்பட பல்வேறு சுய-மன தைரியத்திற்கான நிகழ்ச்சிகளையும் அவ்வப்போது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் நடத்திவருகிறது. அந்த வரிசையில் 2012 ஜனவரி 20ம் தேதி வெள்ளிக்கிழமை முஸ்ரிப் பூங்காவில் இவ்வாண்டின் பொங்கல் விழாவை நடத்தவிருக்கிறது. இந்நிகழச்சியில் குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் மகிழ்ச்சியான விளையாட்டுப் போட்டிகளும் நடக்கவிருக்கிறது. விழா முடிந்தவுடன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை நாம் பொங்கல் விழா கொண்டாட இருக்கிறது. அனைவரும் பங்கு கொண்டு மகிழ்ச்சியாக பொங்கல் கொண்டாட வருமாறு “தமித்துளி“ கேட்டுக் கொண்டுள்ளது.

-கமால் பாஷா

Back to Nri News Home

© Copyright 2012 All Rights Reserved vvonline.in