Exclusive Nri News Around the World

அமீரகத் தமிழ் மன்றத்தின் 12ஆம் ஆண்டு விழா

அமீரகத் தமிழ் மன்றத்தின் 12ஆம் ஆண்டு விழா வரும் 24ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6:00 மணிக்கு துபாய் அல்கிஸைஸில் உள்ள பெண்கள் உயர்தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் வைத்து நடைபெறவிருக்கிறது. இதற்கு சிறப்பு விருந்தினராக `பசங்க`, `வம்சம்`, `மெரினா` படங்களின் இயக்குனர் திரு.பாண்டிராஜ் அவர்கள் கலந்து கொள்கிறார். விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக திரு.பி.எச். அப்துல் ஹமீத் அவர்களின் `பாட்டுக்கு பாட்டு` நடைபெறுவதோடு, சின்னதிரை நடிகை ஐஸ்வர்யாவின் விளையாட்டு நிகழ்ச்சி `வெற்றி கொடி கட்டு`, விஜய் டிவி புகழ் கிரியின் நகைச்சுவை நிகழ்ச்சி, `ப்ரசித்தம்’ மற்றும் `மதர்ஸ் பிரீஸ்’ குழுவினர்களின் கண்கவர் நடனங்கள் என்று பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறவிருக்கிறது. இந்த நிகழ்விற்கான இலவச நுழைவுச்சீட்டுகளை இன்று (செவ்வாய்கிழமை 21 ஆம் தேதி) மாலை 7.30- 8.30 மணிக்குள் அன்னப்பூர்ணா உணவகத்தில் தரவிருக்கின்றனர். அனுமதி சீட்டு உள்ளவர்கள் மட்டுமே இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலும் என்று அமீரகத் தமிழ் மன்றத்தின் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

- ஜெஸிலா, அமீரகத் தமிழ் மன்றம்

Back to Nri News Home

© Copyright 2012 All Rights Reserved vvonline.in