Exclusive Nri News Around the World

துபாயில் தமிழர் பாரம்பரிய கபடி விளையாட்டு

துபையில் கலைகட்டியது “வி.களத்தூர் சங்கமம் 2012“. ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழ்ந்து வரும் நமது வி.களத்தூர் மற்றும் மில்லத்நகர் மக்களை சந்திக்கும் “வி.களத்தூர் சங்கமம் 2012” என்னும் நிகழ்ச்சி துபை முஸரிப் பார்க்கில் 24-02-2012 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காலை 9.30 மணிமுதல் மாலை 6.00 .மணிவரை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வி.களத்தூர் மட்டுமல்லாது அக்கம் பக்க ஊர்வாசிகளும் கலந்து கொண்டனர். ஆகிய ஊரைச் சேர்ந்தவர்களும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை விழாக்குழுவின் வரவேற்புக்குழுவினர் வரவேற்றனர். இந்நிகழ்ச்சியில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ’கபடி விளையாட்டு’ முக்கிய இடம் பிடித்தது. அரபு மக்களை வெகுவாகக் கவர்ந்தது. இதுதவிர, ’பின்னோக்கி ஓடுதல், கலர் பந்து பொறுக்குதல் உள்ளிட்ட செயலுக்கும் மூளைக்கும் வேலைகொடுக்கும் போட்டியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக சவுதி அரேபியாவிலிருந்து சுலைமான், துபை ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் லியாக்கத் அலி, இணைப் பொதுச் செயலாளர் முஹம்மது தாஹா, ஐக்கிய ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் மொய்தீன் அப்துல் காதர் மற்றும் ஈமான் அமைப்பின் ஊடகத்துறை முதுவை ஹிதாயத்துல்லா ஆகியோர் கலந்து கொண்டனர். மக்களை ஒருங்கிணைக்கும் பணிக்கு துபை ஹலோ எஃப்.எம்., தட்ஸ்தமிழ் ஆகியவை ஒத்துழைப்பு நல்கின.

- கமால் பாஷா

Back to Nri News Home

© Copyright 2012 All Rights Reserved vvonline.in