Exclusive Nri News Around the World

மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் கூடுகை தின விழா

Date: Friday 25 May 2012 இடம்: அபுதாபி , இந்திய சமுக கலாச்சார கட்டிடம் (ISCS ) மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் கூடுகை மே 25ம் தேதியன்று மிக சிறப்பாக நடைப்பெற்றது. 140க்கும் மேற்ப்பட்ட உறுப்பினர்களை தன்னகத்தில் கொண்ட மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) கிளை 2004 ம் ஆண்டு துவங்கப்பட்டது. Friday 25 May 2012 ம் தேதி அன்று அவர்களின் கூடுகையினை அபுதாபி , இந்திய சமுக கலாச்சார கட்டிடம் (ISCS )ல் வெகு சிறப்பாக நடைப் பெற்றது. பெருந்திரளான உறுப்பினர்கள் தங்கள் குடும்பத்துடன் கூடுகையில் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு, மகிழ்ந்து இரவு விருந்துடன் விடைப்பெற்றனர். திரு. இலக்குமனன், திரு. கிரிஸ்டோபர், திரு. பால்ராஜ் ,திரு நடராஜன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தங்களுடைய அனுபவத்தை மிக அழகாக தெரிவித்தார்கள். திரு. இலக்குமனன் இவர் பொழுது சொன்ன வார்த்தை மக்களை யோசிக்க வைத்தது " நாம் ஏன் சம்பளம் வாங்கு பவராக இருக்க வேண்டும், ஏன் கொடுப்பவராக இருக்கக்கூடாது". வரவேற்புரை திரு. சிவக்குமார் ,TCEUAE ALUMNI SECRETRY அவர்கள் வழங்கினார். மதியம் 12 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்ச்சி மாலை 5:00 மணிவரை நீடித்தது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. கடந்த கால நினைவுகள் வெகு அழகாக பரிமாரப்பட்டது. கல்லுரியின் புகைப்படம் மற்றும் இதறக்கும் முன்னால் நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் திரையில் கான்பிக்கப்பட்டது. சிறப்பு விருந்தினருக்கு பொன்னாடையும், நினைவு பரிசும் வழங்கப்பட்டது. இதற்க்கு பின் திருமதி லக்ஷ்மி டீச்சர் ,ksc , நடனக்குழுவின் அற்புதமான நாட்டியமும் வந்து இருந்த அனைவருடைய பாரட்டை பெற்றது. திரு முகமத் அலி அவர்களின் FLUTE அனைவருடைய பாரட்டை பெற்றது. திரு. மணிமேகலை அவர்கள் TCEUAE WEB SITE அறிமுகபடிதினர் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அனைவருக்கும் பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது. இவ்விழாவை குருகிய காலத்தில் வெகுசிறப்பாக ஏற்பாடு செய்து இருந்த திரு ராஜா திரு.MUTHUKUMARAVEL , ., திரு அரவிந்தன் . ., திரு.உதய குமார் திரு.மன்னவன் ,திரு மணிமாறன் ,மற்றும் அத்துனை நண்பர்களுக்கும் திரு. முத்துகுமரவேல் நன்றி தெரிவித்தார். இறுதியில் தேசியகீதம் உரையுடன் விழா நிறைவுற்றது. யுஏஇ யில் வசிக்கும் மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் எவரேனும் இருப்பின் தங்களை இச்சங்கத்தில் உட்படுத்திக் கொள்ள முன்னாள் மாணவர்கள் சங்கம் அன்புடன் அழைக்கிறது. கீழ்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும் Mobile : +971 50 8361629 , email: tceuae@gmail.com

- கமால் பாஷா

Back to Nri News Home

© Copyright 2012 All Rights Reserved vvonline.in