Exclusive Nri News Around the World

பெண்களின் உடல் நலம் - ஜெத்தா மகளிர் உலகம்
ஜெத்தா மகளிர் உலகம் பெண்களின் உடல் ஆரோக்கியம் என்னும் தலைப்பில், ஃபுயுச்சர் ஜெனரேஷன் (FG) பன்னாட்டு பள்ளி அரங்கில் சென்ற வெள்ளிக்கிழமை, அக்டோபர் 8ம் தேதி பயனுள்ள நிகழ்ச்சியை நடத்தியது. நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினராக கலந்து கொண்ட டாக்டர் ஆஷா கார்த்திகேயன் அவர்கள் பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பெண்களுக்கு ஏற்படும் புற்று நோய்கள், அவைகளை அறிந்துக் கொள்ளும் முறைகள் மற்றும் அதற்கான காரணங்களை எளிய முறையில் படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் சொற்பொழிவாற்றினார். அதைத் தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சியில் புற்று நோய்களை கண்டறியும் சுய பரிசோதனைகள், கருப்பைகளில் ஏற்படும் புற்று நோய்களின் தன்மைகள் மற்றும் அவைகளை களையும் மருத்துவ சிகிச்சைகளை எளிய முறையில் விளக்கினார். பெண்கள் மட்டுமே கலந்துக் கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால், நிகழ்ச்சியில் பெண்கள் தங்களின் சந்தேகங்களை அச்சமின்றி கேட்டறிந்தனர். முன்னதாக நிகழ்ச்சியை சுமையா ஹுசைன் அவர்கள் குரான் வசனங்கள் ஓதி அதன் தமிழாக்கத்தையும் பேசி தொடங்கி வைத்தார். டாக்டர் ஆஷா கார்த்திகேயன் அவர்களுக்கு திருமதி பூர்ணிமா மூர்த்தி அவர்கள் பூங்கொத்து வழங்கி வரவேற்றுக் கௌரவித்தார். அதைத்தொடர்ந்து டாக்டர் ஆஷா அவர்களின் விரிவுரையும், திருமதி புவனா ராஜகோபால் அவர்கள் தலைமையில் கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடந்தது. டாக்டர் ஆஷா கார்த்திகேயன் அவர்களுக்கு மகளிர் உலகத்தின் சார்பாக அதன் தலைவர் திருமதி தில்ஷாத் அக்பர் பாட்சா அவர்கள் பரிசுகள் வழங்க நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. திருமதி சபீனா சுலைமான் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மகளிர் உலகத்தின் நிர்வாகிகள் திருமதி மும்தாஜ் சீனி அலி, நஜ்மா ஜின்னா, ராபியா மொய்தீன், அஜீதா சலீம் மற்றும் ஃபல்லூலியா ஆசிக் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக இருந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்தி வைத்தனர்.

- Kamal Basha


Back to Nri News Home


© Copyright 2010 All Rights Reserved vvonline.in